விஜய் மல்லையா நாடு கடத்தப்பட வாய்ப்பு

0 2610
நாடு கடத்தலை எதிர்த்த மல்லையாவின் முறையீடு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் 28 நாட்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன்வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாத நிலையில் லண்டனுக்குத் தப்பிச் சென்றார். இது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக அவரை நாடுகடத்த வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கையை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் 14 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு வாய்ப்புள்ளது. அப்படி மேல்முறையீடு செய்யாவிட்டால் 28 நாட்களில் அவர் விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவார் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments