வடகொரிய அதிபரின் உடல்நலம் மிக மோசமான நிலையில் உள்ளதாக தகவல்

0 45074
கிம் ஜாங் உன்னுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம், இருதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளிடம் இருந்து வடகொரியா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி கிம்மின் தாத்தாவும் முக்கிய தலைவருமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய நிகழ்வில் வழக்கத்திற்கு மாறாக கிம் பங்கேற்காது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், கிம்மின் உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மிகவும் ஆபத்தான கட்டத்தில் அவர் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments