ஏப்ரல் 23 - காங்கிரஸ் காரியக் கமிட்டி சிறப்புக் கூட்டம்
கொரோனா வைரஸ் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் 23-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அப்போது நாடு முழுதும் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். அனைத்து காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments