கொரோனா தாக்கத்தால் ஆட்சேர்ப்பு, ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைத்த இன்ஃபோசிஸ்

0 7414
கொரொனாவால் இன்ஃபோசிஸ் நிர்வாக நடைமுறை மாற்றங்கள்

கொரோனா தாக்கத்தை அடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆட்சேர்ப்பு, ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள், உள்ளிட்டவற்றை நிறுத்தி வைத்துள்ளது.

தற்போதைய சூழலில் இது எவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும், மேலும் பெரிய அளவிலான செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் அதன் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை சுட்டிக்காட்டி எவரும் பணி நிறுத்தம் செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.  அனைவரையும் உடனடியாக அலுவலகப் பணிக்கு அழைக்க அவசியம் நேரவில்லை என்றும் 5 சதவீத பணியாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு மற்றவர்கள் படிப்படியாக அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறிப்பிட்ட அளவிலான பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றச் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments