சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது...
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
27 நாட்களுக்குப் பின் சுங்கச் சாவடிகள் நேற்று இயங்கத் தொடங்கின. ஊழியர்கள் முக கவசம் அணிந்தும் கையுறை அணிந்தும் பணியில் ஈடுபட்டனர். கார்,வேன்,ஜீப் ஆகியவற்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 45ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சிறிய ரக வாகனங்கள், மினி பேருந்துக்கு 65ரூபாயில் இருந்து 70ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து,லாரிகளுக்கு 140ரூபாயில் இருந்து 145 ரூபாயாகவும், கனரக சரக்கு வாகனங்களுக்கு 155ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கண்டெய்னர் லாரிகளுக்கு 220 ரூபாயில் இருந்து 225 ரூபாயாகவும், பெரிய கண்டெய்னர் லாரிகளுக்கு 265 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Comments