தெலுங்கானாவில் இந்த மாதமும் அரசு ஊழியருக்கு 50 சதவீத ஊதியம்

0 6637
தெலுங்கானாவில் அரசு ஊழியருக்கு 50 சதவீத ஊதியம்

தெலுங்கானாவில் கடந்த மாதத்தை போல், இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மாதத்தை போல் அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கும் 50 சதவீத சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு 75 சதவீத சம்பளமும் அளிக்கப்படும் என்றார். மின்துறை ஊழியர்களுக்கு முழு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்றும் சந்திரசேகரராவ் தெரிவித்தார். மே 7ம் தேதி வரை அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து 5ம் தேதி முடிவு செய்யப்படும் என்றார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments