பூஜ்யம் டாலருக்கும் கீழ் குறைந்த அமெரிக்க கச்சா எண்ணெய் விலை

0 9102
தலைகீழாகக் கவிழ்ந்த கச்சா எண்ணெய் விலை

கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அமெரிக்க கச்சா எண்ணெய் விலை பூஜ்யம் டாலருக்கும் கீழ் சரிவடைந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், கோடிக் கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வாகன போக்குவரத்து இல்லாததால், கச்சா எண்ணையின் தேவை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. சர்வதேசச் சந்தையில் முக்கிய இடத்தை வகிக்கும் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எனப்படும் டபிள்யூ.டி.ஐ. நிறுவனத்தின்  கச்சா எண்ணெய் பூஜ்யம் டாலருக்கும் கீழே சென்று குறைந்த பட்சமாக பேரல் ஒன்று மைனஸ் 37.63 டாலருக்கு சென்றது.

அதாவது விற்பனையாளர்கள், முதலீட்டாளர்களுக்கு எண்ணெய் வாங்க கூலி கொடுப்பது போன்ற நிலையைப் போன்றது. பின்னர் சற்றே மீண்ட அதன் விலை பூஜ்யம் புள்ளி 0.15 டாலரில் நிலை கொண்டது. இது கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத மிகமோசமான சரிவாகும். உற்பத்தி அதிகரிப்பு, தேவைக் குறைவு, உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை சேமிக்க இட வசதியின்மை, கச்சா எண்ணையை வாங்க முதலீட்டாளர்களிடையே ஆர்வம் இன்மை ஆகியவையே கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments