கொரொனா குறித்து அமெரிக்காவிடம் எதையும் மறைக்கவில்லை -WHO
கொரொனா தொடர்பாக அமெரிக்காவிடம் எதையும் மறைக்கவில்லை என்றும், அது தோன்றிய முதல் நாளில் இருந்தே எச்சரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவுக்கு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தை டிரம்ப் அரசு பொறுப்பற்ற முறையில் கையாண்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் மிக தாமதமாக எச்சரித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரஸ் அதானம் ஜெப்ரேயெஸஸ் ((Tedros Adhanom Ghebreyesus )) அமெரிக்க அரசு ஊழியர்களும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அந்த வகையில் முதல் நாளில் இருந்தே அமெரிக்க அரசுக்கு தகவல்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Comments