செய்தியாளர்கள் 53 பேருக்குக் கொரோனா வந்ததன் எதிரொலி - தனிமைப்படுத்தலில் மும்பை மேயர்

0 2017
தனிமைப்படுத்தலில் மும்பை மேயர்

மும்பையில் ஊடகத்துறையினருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மேயர் கிசோரி பெட்னேகர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மும்பை மாநகரில் இரண்டாயிரத்து 268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளளனர். இந்நிலையில் அங்குள்ள ஊடகத்துறையினர் 171 பேருக்குக் கொரோனா சோதனை செய்ததில் அவர்களில் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மேயர் கிசோரி பெட்னேகர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். தானும் தனது ஓட்டுநரும் ஆய்வு செய்ததில் கொரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும், இருப்பினும் தான் சந்தித்த செய்தியாளர்களுக்குக் கொரோனா இருப்பது தெரியவந்ததால் அடுத்த 14 நாட்களும் வீட்டில் இருந்தே பணியாற்றப் போவதாக ஒரு வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments