மாத்திரைகளையும் , கோதுமையையும் அனுப்பி வைக்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஆப்கன் அதிபர்

0 8487
இந்தியாவுக்கு ஆப்கன் அதிபர் நன்றி

ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரைகளையும் கோதுமையையும் அனுப்பும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்குகிறது. இதேபோல் 75 ஆயிரம் டன் கோதுமையையும் இந்தியா அனுப்பி வைக்க உள்ளது. முதற்கட்டமாக 3 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளும், 70 ஆயிரம் பாராசிட்டமால் மாத்திரைகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments