கொரோனாவால் இறக்கும் நபர்களை உரிய முறையில் தகனம் செய்யவதாக சென்னை மாநகராட்சி விளக்கம்

0 3505
கொரோனாவால் இறக்கும் நபர்களை தகனம் அல்லது அடக்கம் செய்தல்

கொரோனாவால் இறக்கும் நபர்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய, உலக சுகாதார அமைப்பு மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழக்கும் சகமனிதர்களை தகுந்த மரியாதையுடன் அனுப்பிவைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என சென்னை மாநகராட்சி விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடலத்தை கவனமாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் பாதுகாப்பான முறையிலும் கையாளவும் மற்றும் சரியான முறையில் தகனம் செய்யவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, இறந்த நபர்களின் சடலத்திலிருந்து எந்தவொரு நோய்ப் பரவலையும் பற்றி மக்கள் கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை என்றும், இந்த விஷயத்தில் சமூகத்திற்கான முழு பாதுகாப்பை உறுதியளிப்பதாகவும் வேண்டுகோளில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments