இஸ்லாமிய மதபோதகர் இறுதிச் சடங்கில் குவிந்த ஒரு லட்சம் பேரால் அதிர்ச்சி

0 9182

பங்களாதேஷில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இஸ்லாமிய மதப்போதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரியின்(Maulana Zubayer Ahmad Ansari)இறுதிச்சடங்கில், பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளமென திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிய நிலையில், இது குறித்து குழு அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments