10ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

0 6541
ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

மே 3 ம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கு, முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்ட பின், 10 -வது வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 - வது வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, சென்னை - தலைமை செயலகத் தில் செய்தியாளர்களிடம் விளக்கிய அவர், பொதுத் தேர்வு , நடத்தப்பட வேண்டி யது கட்டாயம் என்றார்.

10 - வது வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் போது, சமூக இடைவெளி உள்ளிட்ட ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் 24 ம் தேதி தேர்வு எழுத முடியாத சுமார் 3 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments