மகாராஷ்ட்ராவில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா உறுதி
மகாராஷ்ட்ராவில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா உறுதியானதன் மூலம், அம்மாநிலத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று சிகிச்சை பலனின்றி 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கையும் 223 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், இதுவரை 507 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Comments