54 மாவட்டங்களில் 14 நாட்களில் புதிய வைரஸ் தொற்று இல்லை - மத்திய அரசு
நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய வைரஸ் தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் இதுவரை 2 ஆயிரத்து 231 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்து 27 பேர் உயிரிழந்ததாக கூறியவர், புதுச்சேரிக்குட்பட்ட மாஹி மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவுக்கு என்றே 755 மருத்துவமனைகளும் 1389 சுகாதார மையங்களும் செயல்படுவதாக கூறினார்.
Comments