பெருந்தொற்றால் பேரழிவு... அச்சத்தில் அமெரிக்கர்கள்

0 5542
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.

உலகின் ஒருகோடியில் உள்ள சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று நோய் மறுகோடியில் உள்ள அமெரிக்காவில் மரணதாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் நோயின் மையப் புள்ளியான அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பலியானதால், இதுவரை அங்கு 40 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 500ஐத் தாண்டியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நபர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் நியூயார்க் நகர காவல்துறையில் 4 ஆயிரத்து 371 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 73 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அங்கு பொதுமக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக நோய்த் தொற்று சோதனை செய்யும் திட்டம் இருப்பதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் அமெரிக்கப் பொருளாதாரம் சில மாதங்களில் சரி செய்யப்படும் என நிதித்துறைச் செயலாளர் ஸ்டீவன் நூசின் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கும், சிறு தொழில்களுக்கும் டிரம்ப் போதிய அளவு நிதி ஒதுக்கவில்லை என ரோட் தீவுகள் பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுகாதாரத்துறையால் வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனைக் கருவிகள் மாசுபாடுடன் இருந்ததால் சுமார் 12 ஆயிரம் கருவிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments