வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா ; திணறும் உலக நாடுகள்

0 3199
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் ஆட்டி படைத்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டி விட்டது. வைரஸ் தொற்றுக்கு, இதுவரை 24 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் ஆட்டி படைத்து வருகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை, பலி எண்ணிக்கை 40ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 64 ஆயிரத்தை தொட்டுள்ளது.

இத்தாலியில் பலி 23 ஆயிரமாகவும், ஸ்பெயினில் உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்தும், உயர்ந்து வருகிறது.

பிரான்ஸில் கொரோனா காவு வாங்கியோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 500 ஐ நெருங்கி வருகிறது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்து 850 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

பெல்ஜியத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 700 ஐ நெருங்கி விட்டது.

ஈரானில், ஒரே நாளில் ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு, கொரோனா உயிரிழப்பு 5 ஆயிரத்தை தாண்டி, உயர்ந்து வருகிறது.

சீனா, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால், அங்கு உயிரிழப்பு 4 ஆயிரத்து 600 என்ற அளவில் நிற்கிறது.

ஜெர்மனியில் உயிரிழப்பு 4 ஆயிரத்து 500 - ஐ கடந்து விட்டது.


நெதர்லாந்தில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 700 ஐ எட்ட, பிரேசிலில் 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி, ஸ்வீடன், கனடா, சுவிட்சர்லாந்து , போர்ச்சுக்கல் என பல நாடுகளிலும் கொரோனாவுக்கு இரை ஆனோர் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து வருகிறது.

மெக்சிகோவில் 650 பேரும், ரஷியாவில் 361 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக மொத்தம் கொரோனாவுக்கு பலி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 46 ஆக உயர்ந்தது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்து 7 ஆயிரத்து 211 ஐ எட்டியுள்ளது.

குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டிய போதிலும், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments