மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை - நிர்மலா சீதாரமன்

0 3919
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியத்தில் 20 சதவிகிதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரவிய செய்தி தவறானது என, மத்திய நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னர் தெளிவுபடுத்தப்பட்டபடி ஓய்வூதியத்தைக் குறைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும்,  இதுதொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றவர்,  ஓய்வூதியதாரர்களின் நலனுக்கும் நல்வாழ்விற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments