"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிக்க கூடாது : மத்திய சுகாதார அமைச்சகம்
மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிக்க கூடாது என்றும், அவ்வாறு தெளித்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் பாதை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதனுள் வருவோர் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனிநபர்கள் மற்றும் குழுவினர் மீது கிருமி நாசினி தெளிக்க எந்த சூழ்நிலையிலும் பரிந்துரைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனம் கலந்த கிருமி நாசினியை தெளிப்பதால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவர் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments