தேயிலைக்கு கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் திறன் உண்டா ?
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தேயிலை பயன்படுமா என்ற ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும், குன்னூரில் உள்ள தேயிலை ஆராய்ச்சிக் கழகமும் சேர்ந்து நடத்துகின்றன.
தேயிலையில் உள்ள தியாஃபிளேவின்-3 (theaflavin-3) என்ற சத்து ஆன்டிவைரல் தன்மை கொண்டது என சீனா மற்றும் தைவானில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தென்னிந்திய தேயிலைத் தோட்ட உரிமையாளர் சங்கமான உபாசி தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், கறுப்பு மற்றும் கிரீன் தேயிலையில் உள்ள தியாஃபிளேவின் சத்துகள், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க நல்ல ஆதாரமாக அமையுமா என்ற ஆராய்ச்சி நடப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments