பெங்களூருவில் போலீசார்- பொதுமக்கள் இடையே மோதல்
பெங்களூருவில் நேற்று போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
பெங்களூருவில் கொரோனா காரணமாக 60 பேரை, முழுமையாக தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் முடிவு செய்து, அவர்களை அழைத்து வர மருத்துவ குழுவினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது பேட்டராயனபுராவில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 25 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர். இந்நிலையில் அவர்களுடன் தொடர்பில் மேலும் 17 நபர்களையும் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது அவர்கள் வர மறுத்து காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
Comments