தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா

0 14598
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

ஒரே நாளில் 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, திடீரென உச்சத்தை எட்டி உள்ளது. ஒரே நாளில் 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 372 ல் இருந்து ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்து 744 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டது. இதுவரை, 35 ஆயிரத்து 741 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

வீடுகளில் 21 ஆயிரத்து 381 பேர் தனிமை படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, கொரோனா சிறப்பு வார்டுகளில் ஆயிரத்து 987 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

ஒரே நாளில் 41 பேர் குணம் அடைந்ததால், இதுவரை 411 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட வாரியாக வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில், ஒரே நாளில் 50 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, 285 பேருடன் சென்னை, தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தஞ்சாவூரில் 10 பேரும், விழுப்புரத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவாரூர் - 5, தென்காசி - 4 மற்றும் விருதுநகரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் 23 மாவட்ட ங்களில் கொரோனாவால் புதிய பாதிப்பு இல்லை. இதுதவிர, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 34 மாவட்டங்களில் மொத்தம் ஆயிரத்து 477 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments