மகாராஷ்டிராவில் சிறைகளில் பணியாற்றும் காவலர்கள், வார்டன்கள் வெளியே வரத் தடை
மகாராஷ்டிரத்தில் சிறைகளில் பணியாற்றும் காவலர்களும் வார்டன்களும் வெளியே வராமல் சிறை வளாகத்துக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் உள்ள சிறைகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதிகளுக்குக் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக வெளியில் இருந்து சிறைக்குச் செல்லவும், சிறை வளாகத்தில் இருந்து காவலர்கள், வார்டன் வெளியில் வராமல் இருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வார்டன், காவலர் ஆகியோருக்குச் சிறை வளாகத்திலேயே தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுரங்காபாத் மற்றும் 5 நகரங்களில் உள்ள சிறைகளில் இந்தக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
Comments