மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேர் கவலைக்கிடம்: உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 75 சதவீதம் பேரிடம், வெளிப்படையாக அந்நோய்க்கான அறிகுறிகள் தெரியவில்லை (Asymptomatic) என்று கூறியுள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் 52 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வீடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ள அவர், மகாராஷ்டிராவில் பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ண மண்டலங்களில் நாளை முதல் தொழிற்சாலைகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு பணிபுரிவோருக்கு ஆலை நிர்வாகம் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது குறித்து எந்தவித கவலையும் கொள்ள தேவையில்லை என்றும், பிரச்னை முடிவுக்கு வந்ததும் சொந்த ஊர் செல்ல அவர்களுக்கு மாநில அரசு உதவி செய்யும் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Comments