கொரோனா தொற்றை தடுக்க ராணுவத்தில் கட்டுப்பாடுகள்
ராணுவத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, படைகளை ஓரிடத்தில் குவிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிடிஐ க்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், ராணுவத்தினருக்கான விடுப்புகளும் முடிந்த வரை தவிர்க்கப்படுவதாக தெரிவித்தார். வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
கொரோனாவை ஒழிக்க அனைத்து அரசு துறைகளும் ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நமது வாழ்நாளில் நாம் நடத்தும் போர் என்றும் ராஜ்நாத்சிங் கொரோனாவை வர்ணித்தார்.
Comments