கொரோனா கொடுமையில.. என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்..? நடு ரோட்டில் கேக் வெட்டிய பொண்ணு

0 22060
கொரோனா பீதிக்கு மத்தியில் இளம்பெண்கள் நடத்திய கூத்து

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால் நாடே முடங்கி கிடக்க, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை நடுவில், 3 பெண் புள்ளீங்கோஸ் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய கூத்து அரங்கேறி உள்ளது. போலீசை கண்டதும் ஓட்டம் எடுத்த உள்ளூர் வீராங்கனைகளின் சாகசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கொரோனாவால் அமெரிக்கா காரவுக அரண்டு கிடக்கிறாய்ங்க...! இத்தாலிகாரவுக இருண்டு கிடக்கிறாய்ங்க...! அதனை பரப்பிய சீனாகாரவுக சின்னாபின்னமாகி இப்பதான் ஒரு நிலைக்கு வந்திருக்காக...!

இந்தியாவுல ஊரடங்கால் நாடே தவிச்சி கிடக்குது... கொரோனாவால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுத்து வருகிறார்கள்..!

இந்த நிலையில் நாட்டை பற்றி மட்டுமல்ல வீட்டை பற்றி சிந்தனையும் இல்லாமல் சுற்றி திரிந்த 3 சிம்ரன்ஸ் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையின் செண்டர் மீடியன் அருகே கூடினர்.

தாங்கள் கையோடு எடுத்து வந்திருந்த கேக்கை அங்கு வைத்து வெட்டிய அவர்கள் ஒருவர் முகத்தில் ஒருவர் மாறி மாறி சந்தனம் போல பூசிக் கொண்டாடினர்.

ஆளில்லா சாலை, அந்த இளம்பெண்களின் அலப்பறையால் களை கட்டியது. இதனை கண்ட ரோந்து போலீசார் அவர்களை மடக்கி என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்... என்ற ரீதியில் விசாரிக்க... ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போல அங்கேயே பதுங்கினர்.

போலீசார் எச்சரித்ததும், 3 இலவச அரிசிகளும் அங்கிருந்து விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு பெண் அனாமத்தாக ஆட்டோவில் சிக்க நேர்ந்து, ஆட்டோ ஓட்டுனரின் கருணையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வீட்டில் தனித்திருந்தால் மட்டுமே கொரோனா தொற்றை விரட்ட முடியும்.

ஆணுக்கு பெண் சமம் என்பதில் எவருக்கும் இங்கே மாற்றுக் கருத்தில்லை. அதற்காக ஊர்சுற்றி புள்ளீங்கோஸ் போல பொறுப்பின்றி சுற்றுவதால் எந்த பயனும் விளைந்துவிடப் போவதில்லை. என்பதை சுட்டிக்காட்டும் போலீசார், இப்படியே வீதியில் சுற்றி கேக்வெட்டி கொண்டாடினால், வீட்டில் உள்ளோருக்கு கொரோனாவைத்தான் பிறந்த நாள் பரிசாக வாங்கிச்செல்ல நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments