டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வில்லை: முதலமைச்சர் கெஜ்ரிவால்
டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தப்பட மாட்டாது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை நாளை முதல் தளர்த்துவது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்றும், ஆனால் கள நிலவரம் அதற்கு நேர்மாறாக இருப்பதால், தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதா, வேண்டாமா என்பது குறித்து மீண்டும் ஒரு வாரம் கழித்து 27ம் தேதி நிபுணர்களுடன் தாம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
Comments