கொரோனா பலி: இந்தியாவில் 500ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் ஆயிரத்து 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனா நோய்க்கு பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 712ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 507ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா நோயால் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 3 ஆயிரத்து 648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 211 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்து டெல்லி கொரோனாவால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 407 பேரும், குஜராத்தில் ஆயிரத்து 376 பேரும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 372 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவிலிருந்து இதுவரை 2 ஆயிரத்து 230 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து, 12 ஆயிரத்து 974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments