6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பில் உதவி
சென்னை கொளத்தூர், துறைமுகம், அம்பத்தூர், திருவிக நகர், வில்லிவாக்கம், அண்ணா நகர், உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 500 ரூபாய் ரொக்கம், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உட்பட 14 பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்ற அவர், தனிநபர் இடைவெளியை பின்பற்றி காத்திருந்தவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதே போல் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு முககவசம், கையுறைகள், சோப், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.
Comments