ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் நாளை முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும்

0 5785
ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் நாளை முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும்

கொரோனா அதிகம் பாதித்த சிவப்பு மண்டலப் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் அரசு அலுவலகங்கள் நாளை முதல் செயல்பட உள்ளன.

கொரோனா அதிகம் பாதித்த 170 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர ஆரஞ்சு, பச்சை மண்டலப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளைக் கட்டுப்பாடுகளுடன் இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதனால் அரசு அலுவலகங்களைத் திறப்பதற்கான உத்தரவுகளை கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.

அனைத்து அலுவலகங்களிலும் காய்ச்சல் கண்டறியும் கருவிகள், கிருமிநாசினிகளை வைத்திருக்க வேண்டும் என்றும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

எந்த அனுமதிச் சீட்டும் இன்றி இருசக்கர வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் பெறப்படாது என அரியானா அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments