சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டம்

0 5827
சீனாவில் இருந்து வெளியேறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் தொழிற்பூங்காக்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இருந்து வெளியேறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் தொழிற்பூங்காக்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் சீனாவில் இருந்து வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் வெளியேறும் சூழல் உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவற்றை இந்தியாவில் தொழில் தொடங்க வரும்படி ஈர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 50 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரை நிலத்தைத் தெரிவு செய்து சூரிய ஒளி மின் உற்பத்திக் கருவிகள், காற்றாலைக்கான கருவிகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பூங்காக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கலாம் என மாநில அரசுகளையும் துறைமுகங்களையும் புதுப்பிக்கத் தக்க எரியாற்றல் அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகமும், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இப்போது சூரிய ஒளி மின்னுற்பத்திக் கருவிகளில் 85 விழுக்காடு வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments