மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனா நோயால் அதிக பாதிப்புக்கு உள்ளான மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அந்த மாநிலத்தில் 3ஆவது முறையாக நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதில் மும்பையில் அதிகபட்சமாக 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் புதிதாக பாதிக்கப்பட்டோரில் 16 பேர் தாராவி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் தாராவியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117ஆக உயர்ந்துள்ளது.
இதற்கடுத்து புனேவில் 78 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 648ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் 211 ஆக உயர்ந்துள்ளது.
Comments