ஊரடங்கால் உற்சாகமாக சுற்றித் திரியும் பறவைக்கூட்டம்

0 3431
ஊரடங்கால் உற்சாகமாக சுற்றித் திரியும் பறவைக்கூட்டம்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிக்கரணை பறவைகள் சரணாலயத்தில் கூழைக்கடா, செங்கால் நாரை, உள்ளான், நீர்க்காக்கை, ஆள்காட்டிக் குருவி, தவிட்டுக் கொக்கு, வெள்ளை பூநாரை, பாம்பு தாரா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வசித்து வருகின்றன.

ஏனைய நாட்களில் சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுவதால் பறவைகள் பெரும் தொந்தரவுக்கு ஆளாகி வந்தன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலப் பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலம் என்றும், இனப்பெருக்கம் காரணமாக அவற்றின் எண்ணிக்கை உயரும் என உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments