கொரோனா பாதிப்பு : சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த இந்தியா
கோவிட் 19 ஏற்படுத்திய பொருளாதார பின்னடைவையடுத்து சீன நிறுவனங்களுக்கு இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 17ம் தேதி அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில் சில மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் சீனா புதிய முதலீடுகளைச் செய்ய இனி அரசின் அனுமதியைப் பெற வேண்டியிருக்கும். அண்மையில் ஹெச்டிஎப்சி வங்கியில் சீனா தனது முதலீட்டை அதிகப்படுத்தியது.
இந்திய நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் நலிவடந்த நிலையில் அவற்றை சீன நிறுவனங்கள் வசப்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்திய நிறுவனங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மத்திய அரசு சீனாவின் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில் சில திருத்தங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
Comments