ஏப்.20 முதல் தொழில்துறைக்கு கட்டுப்பாடுகள் தளர்த்த கர்நாடக அரசு முடிவு
கர்நாடக மாநிலத்தில் கோவிட் 19 பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூர் உள்ளிட்ட நகரங்களின் தகவல் ஒளிபரப்புத்துறை நிறுவனங்கள் 33 சதவீதம் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மீட்சியடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்குத் தடையில்லை என்றும், சிமிண்ட், மணல், ஸ்டீல் போன்ற கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் உள்ள இடத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தினார். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழில் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனங்கள் செல்லத் தடையிருக்காது என்றும், மதுக்கடைகள் மே 3ம் தேதிக்குப் பின்னரே திறக்கப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Comments