ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கிக் கிடக்கும் இந்த மாற்றத்தை இயற்கை வரவேற்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொரோனா பயத்தினால் வீடுகளுக்குள் முடக்கிக் கிடக்கும் இத்தகைய மாற்றத்தை இயற்கை வெளிப்படையாக வரவேற்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யஷோமைட் வனப்பகுதியில் இருந்து நரி, கரடி, மான்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வனப்பகுதியை விட்டு சாலையிலும், வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியிலும் சுற்றி வருகின்றன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள யஷோமைட் வனப்பகுதியின் தலைவர் பிராங்க் டீன், இது ஒரு அற்புதமான காட்சி என்று வர்ணித்துள்ளார்.
நதி, வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் இயற்கையான ஒலிகளை தற்போதுதான் கேட்பதாகவும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் வனவிலங்குகள் இப்போது கொஞ்சம் தைரியமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments