தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களும் இயங்கும் -பதிவுத்துறை தலைவர்
தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக வாயிலில் கைகழுவுமிடம் அல்லது சானிடைசர் அமைக்கவும், பணிக்கு வரும் அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக அலுவலகத்தை மாற்றியமைக்கவும், கட்டங்கள் வரையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன்கள் வீதம், ஒரு நாளுக்கு 24 டோக்கன்கள் என மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கும் அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிந்து கொள்ள : https://tnreginet.gov.in/portal/
Comments