பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் - மகாராஷ்டிர அரசு

0 942
பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய்

பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானமிழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் இருபதாம் தேதி முதல் அனைத்து அரசு துறைகளைச் சேர்ந்த ஆணையர்கள், இயக்குநர்கள் அலுவலகங்களுக்குச் செல்லலாம் என்றும், பத்து விழுக்காடு அலுவலர்களைக் கொண்டு ஆணையங்கள், இயக்ககங்கள் செயல்படலாம் என்றும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments