ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த பணிகளை செயல்பட அனுமதிப்பது குறித்து வல்லுநர் குழு ஆலோசனை
ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த பணிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது குறித்து, நிதித்துறை செயலாளர் தலைமையிலான வல்லுநர் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
மத்திய அரசு அறிவித்தபடி ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் குறிப்பிட்ட சில பணிகளுக்கு தளர்வு அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத்துறை இயக்குநர், தமிழக டிஜிபி உள்ளிட்டோர் அடங்கிய வல்லுநர் குழுவினர், தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
தீர ஆலோசித்து வல்லுநர் குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், எந்த பணிகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிடும்.
Comments