பஞ்சாப்பில் காவல்துறை உதவி ஆணையர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

0 4052
பஞ்சாப்பில் காவல்துறை உதவி ஆணையர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில், காவல்துறை உதவி ஆணையர் அனில் கோலி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

52 வயதான அனில் கோலிக்கு, லூதியானாவின் பிரதான காய்கறி சந்தையில் பணியில் இருந்தபோது பாதிப்பு ஏற்பட்டு கடந்த 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏப்ரல் 13ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த, ஆரோக்கியமான நபரின் ரத்தத்தை கொடையாகப் பெற்று, அதன் மூலம் அனில் கோலிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க பஞ்சாப் அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை இரவு உடல்நிலை மிகவும் மோசமடைந்து, முக்கிய உறுப்புகள் செயலிழந்து சனிக்கிழமை பிற்பகலில் அனில் கோலியின் உயிர்பிரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments