பார்த்துப் பார்த்து சாலையைக் கடந்த ஊனமுற்றவர் மீது அதிவேகத்தில் மோதிய கார்
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஊனமுற்ற ஒருவரும் ஒரு பெண்ணும் பார்த்துப் பார்த்து சாலையைக் கடந்தபோதும் அதிவேகத்தில் சென்ற காரால் மோதித் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பதைபதைப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஊனமுற்றவரை அந்தப் பெண் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். அப்போது சாலையில் வாகனங்கள் வேகமாகச் சென்றதால் அவர்கள் நின்று, நின்று மெதுவாகவே சாலையைக் கடந்தனர்.
சாலையின் மறுபுறத்தை அடைய சில அடிகளே இருந்த நிலையில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று அவர்களை மோதி தூக்கி வீசிவிட்டு நிற்காமலே சென்றது.
தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிவிட்டரில் ஒருவரால் பதிவிடப்பட்டுள்ள இந்த சி.சி.டி.வி. காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
A scary accident caught on cam in Warangal Urban in #Telangana. Both of them died on the spot. #SpeedThrillsButKills pic.twitter.com/cuqbwNQjXe
— Paul Oommen (@Paul_Oommen) April 18, 2020
Comments