கொரோனா வைரஸ், வூகான் பி4 ஆய்வகத்தில் இருந்து வெளியுலகிற்கு பரவியதா?
வூகான் பி4 ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியுலகிற்கு பரவியது ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என்று வெளியான தகவலை சீனா மறுத்துள்ளது.
இயற்கையாக உருவான கொரோனா வைரஸை, வூகான் அருகே மலைப்பாங்கான வனப்பகுதியில் அமைந்துள்ள பி4 ஆய்வகத்தில், ஆய்வுக்கு உட்படுத்தி வந்தபோது, அங்கு பணியாற்றிய நபர் மூலம் தற்செயலாக வெளியுலகிற்கு பரவியிருக்கலாம் என சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை ஆமோதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வூகான் ஆய்வகம் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவியதற்கோ வூகான் இறைச்சி சந்தையில் இருந்து பரவியதற்கோ உண்மையில் ஆதாரங்கள் ஏதும் இல்லை என லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர் ஃபிலிப்பா லென்ட்டோஸ் கூறியுள்ளார். கவனத்தை திசை திருப்பி, குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Zhao Lijian மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Comments