IMF நிதியை செலவிடுவதில் பாக். அரசு சிறுபான்மையினருக்கு பாரபட்சம் - இந்தியா
கொரோனா பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய வழங்கப்படும் நிதியுதவியை செலவிடுவதில் பாகிஸ்தான் அரசு சிறுபான்மையினருக்கு பாரபட்சம் காட்ட வாய்ப்பிருப்பதாக ஐஎம்எஃப் கூட்டத்தில் இந்தியா எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 1.4 பில்லியன் டாலர்கள் தொகை நிதியுதவி வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி சுர்ஜித் பல்லா (Surjit S Bhalla), கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த வேண்டிய நிதியை பாதுகாப்புத்துறைக்கு பாகிஸ்தான் திருப்பிவிடக்கூடும் என எச்சரித்தார்.
பாகிஸ்தானில் பலூசிஸ்தான், சிந்து உள்ளிட்ட எல்லாப் பிரதேசங்களும், அனைத்து சமூக மக்களும் சமமாக ஒதுக்கீடு பெறும் வகையில் சமூக மற்றும் சுகாதார நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ளும் விஷயத்தில் சிறுபான்மையினருக்கும் சில பிரதேசங்களுக்கும் பாகிஸ்தான் அரசு பாரபட்சம் காட்டி வருவதாகவும் சுர்ஜித் பல்லா குற்றம்சாட்டினார்.
Comments