கொரோனா அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட்டாக கொல்கத்தா வரையறை
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட் ஸ்பாட்டாக மத்திய அரசு வரையறை செய்ததால், அங்குள்ள ஏராளமான பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டன.
மேற்குவங்கத்தில் நேற்று மேலும் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. இந்த 162 பேரில் 90 சதவீதம் பேர், கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால் கொல்கத்தாவிலுள்ள பெல்காசியா, நர்கேல்டாங்கா, முதியாலி, நாகர்பஜார் உள்ளிட்ட பகுதிகள் பேரிகார்டுகள் மூலம் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு, தேவையின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்டை மாவட்டமான ஹவுராவும் (howrah) ஹாட் ஸ்பாட்டாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், அங்கும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
Comments