எத்தனை ராபிட் டெஸ்ட் கிட்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன ? - மு.க.ஸ்டாலின் கேள்வி
கொரோனா பரிசோதனைக்காக எத்தனை ராபிட் டெஸ்ட் கிட்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தங்கள் மாநிலத்துக்கு எத்தனை கருவிகள் எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், அதே போல் தமிழக அரசும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இதனை வலியுறுத்துவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
#CoronaVirus பரிசோதனைக் கருவிகள் எத்தனை - என்ன விலை- எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 18, 2020
நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்! pic.twitter.com/vAdxRIwEFM
Comments