வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு நீரவ் மோடியின் தம்பி கடிதம்
பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உதவ நீரவ் மோடியின் தம்பி முன்வந்துள்ளார்.
மும்பை வைர வணிகர் நீரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கியில் உத்தரவாதக் கடிதம் பெற்றுப் பல்வேறு வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் கடன்பெற்று 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் நீரவ் மோடி, அவர் தம்பி நீசல் மோடி, இவர்களின் தாய்மாமன் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிந்துள்ளன.
லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியை விசாரணைக்கு அழைத்து வர முயற்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் பெல்ஜியத்தில் உள்ள நீசல் மோடி, அமலாக்கத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது அண்ணனின் மோசடியில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவரது நிறுவன இயக்குநர் என்கிற முறையில் ஊதியத்தையும், சட்டப்படியான வருமானத்தையுமே தான் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments