காசநோய் தடுப்பூசியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வு
காசநோய் வராமல் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் BCG தடுப்பு மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு காசநோய் வராமல் தடுப்பதற்காக போடப்படும், பேசில்லஸ் கால்மேட் கெரின் (Bacillus Calmette-Guerin) தடுப்பூசியின் கொரோனாவுக்கெதிரான செயல்திறன் குறித்து அடுத்த வாரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தினசரி கொரோனா பாதிப்புகள் குறித்து பேசிய ஐசிஎம்ஆர் தொற்று நோயியல் துறை தலைவர் டாக்டர் கங்காகேத்கர் (Gangakhedkar), தற்போதுவரை கொரோனா மீதான BCGயின் செயல்திறன் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும், இதுவரை அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Comments