அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளை அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா மீறியதாக புகார்
கொரோனா பரவலை தடுப்பதற்கான அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளை மீறி அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா, குடும்பத்துடன் சொகுசு விடுதிக்கு சென்று விடுமுறையை கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நோய் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து வாஷிங்டனில் கடந்த 1-ந்தேதி முதல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் தேவையற்ற பயணம் மேற்கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிபரின் முக்கிய ஆலோசகர்களான இவாங்கா ட்ரம்ப் மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும், தங்களின் 3 குழந்தைகளுடன் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்று பாஸ்கா இரவை கொண்டாடியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
Comments