பஞ்சாபில் கோதுமைப் பயிர்கள் விளைந்தும் ஊரடங்கால் அறுவடை தாமதம்
பஞ்சாபில் கோதுமைப் பயிர் நன்கு விளைந்துள்ள நிலையில், ஊரடங்காலும், பருவம் தவறிப் பெய்யும் மழையாலும் அறுவடை செய்ய முடியாமல் போய் வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் கோதுமை விளைச்சலில் 20 விழுக்காடும், நெல் விளைச்சலில் 10 விழுக்காடும் பஞ்சாபில் இருந்தே கிடைக்கிறது. இந்திய உணவுக் கழகத்துக்கு வேறெந்த மாநிலங்களையும் விட அதிகத் தானியங்களை வழங்குவது பஞ்சாப் தான்.
இந்த ஆண்டு கோதுமைப் பயிர் நன்றாக விளைந்திருந்தும், ஊரடங்கால் எந்திரங்கள், தொழிலாளர்கள் கிடைக்காததால் அறுவடை தாமதமாகியுள்ளது. அத்துடன் பருவம் தவறி ஆங்காங்கே மழை பெய்து வருவதால் பயிர்கள் வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Comments