கேரளத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 14 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிப்பு

0 2063
கேரளத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 14 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிப்பு

கேரளத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 14 மாவட்டங்களையும் 4 மண்டலங்களாக மாநில அரசு பிரித்துள்ளது.

சிவப்பு மண்டலத்தில் உள்ள காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மே மூன்றாம் தேதி வரை முழு ஊரடங்கு இருக்கும். ஆரஞ்ச் ஏ மண்டலத்தில் உள்ள பத்தனம்திட்டை, எர்ணாக்குளம், கொல்லம் மாவட்டங்களில் ஏப்ரல் 24 வரை முழு ஊரடங்கு இருக்கும், அதன் பின்னர் பகுதியளவு தளர்த்தப்படும்.

ஆரஞ்ச் பி மண்டலத்தில் உள்ள ஆலப்புழை, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, திருச்சூர் மாவட்டங்களில் ஏப்ரல் 20 வரை முழு ஊரடங்கு இருக்கும், அதன்பின் பகுதியளவு தளர்த்தப்படும். பச்சை மண்டலத்தில் உள்ள கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏப்ரல் 20 வரை முழு ஊரடங்கு இருக்கும், அதன்பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments